2016-05-23 15:30:00

பல்வேறு உயிரினங்களைப் பாதுகாப்பது எதிர்காலத்திற்கு முக்கியம்


மே,23,2016. பல்வேறு உயிரினங்களும், சுற்றுச்சூழல் அமைப்பும், இப்பூமிக்கும், இப்பூமியில் வாழும் எல்லா உயிர்களுக்கும் முக்கியம் என்று, ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் அவர்கள் கூறினார்.

மே 22, இஞ்ஞாயிறன்று கடைப்பிடிக்கப்பட்ட உலக பல்வேறு உயிரினங்கள் நாளுக்கென வெளியிட்ட செய்தியில் இவ்வாறு கூறியுள்ள பான் கி மூன் அவர்கள், பல்வேறு உயிரினங்களைப் பாதுகாப்பதும், அவை அழிவுறாமல் தடுப்பதும், வருங்காலத்திற்கு மிகவும் முக்கியம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், உலகளவில் வெப்பநிலை உயர்வு 1880ம் ஆண்டில் இடம்பெறத் தொடங்கியதற்குப் பின்னர், 12வது மாதமாக, இவ்வாண்டின் ஏப்ரலில், வெப்பநிலை உயர்ந்துள்ளது என்று, உலக வானிலை ஆய்வு நிறுவனமான WMO கூறியது.

வெப்பம் அதிகமாக இருந்ததென பதிவுசெய்யப்பட்ட 15 மாதங்களில், 13, 2015ம் ஆண்டு பிப்ரவரியிலிருந்து தொடங்கியுள்ளது என்று WMO நிறுவனம் மேலும் கூறியது.

நிலம் மற்றும் பெருங்கடலின் வெப்பநிலை பற்றிப் பார்க்கும்போது, 2016ம் ஆண்டு ஏப்ரலில் வெப்பநிலை உயர்வு 1.10 செல்சியுஸ் டிகிரியாக இருந்தது. 

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.