2016-05-21 15:07:00

புலம்பெயர்ந்துள்ள சிறாருக்கும் கல்வி உரிமை உள்ளது


மே,21,2016. புலம்பெயர்ந்துள்ள சிறாரில், ஐம்பது விழுக்காட்டினர் மட்டுமே தொடக்கப் பள்ளியிலும், 25 விழுக்காட்டு வளர்இளம் பருவத்தினர் உயர்நிலைப் பள்ளியிலும் படிக்கின்றனர் என்று ஐ.நா. நிறுவனங்கள் கூறின.

மற்ற சிறாரைப் போன்றே, புலம்பெயர்ந்துள்ள சிறாருக்கும் கல்வி கற்பதற்கு உரிமை உள்ளது என்றும், போர் மற்றும் வன்முறையால் தங்கள் இடங்களைவிட்டு வெளியேறியுள்ள சிறார், ஒதுக்கப்படக் கூடாது என்றும், ஐ.நா. புலம்பெயர்ந்தவர் நிறுவன இயக்குனர் Filippo Grandi அவர்கள் கூறினார்.

தேசிய கல்வி அமைப்புகளில் புலம்பெயர்ந்துள்ள சிறாரும், இளையோரும் சேர்க்கப்படுவதற்கான முயற்சிகளுக்கு, நன்கொடையாளர்களும், வளர்ச்சி நிறுவனங்களும் ஆதரவளிக்குமாறும் Grandi அவர்கள் கேட்டுள்ளார்.

இஸ்தான்புல் நகரில், மே 23, வருகிற திங்களன்று ஆரம்பிக்கும் உலக மனிதாபிமான உச்சி மாநாட்டை முன்னிட்டு, “இனியும் சாக்குப்போக்குகள் வேண்டாம்” என்ற தலைப்பில், யுனெஸ்கோவும், UNHCR நிறுவனமும் அறிக்கை வெளியிட்டுள்ளன.

பல நாடுகளில் உயர்நிலைப் பள்ளியில் புலம்பெயர்ந்துள்ள மாணவர் சேர்க்கை வரையறுக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷ், கென்யா மற்றும் பாகிஸ்தானில், 12க்கும் 17 வயதுக்கும் உட்பட்ட வளர்இளம் பருவத்தினரில் 5 விழுக்காட்டுக்கும் குறைவாகவே உயர்நிலைப் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.   

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.