2016-05-21 15:11:00

காங்கோ குடியரசுடன் திருப்பீடம் ஒப்பந்தம்


மே,21,2016. திருப்பீடத்திற்கும், காங்கோ சனநாயகக் குடியரசுக்கும் இடையே பொதுவான விவகாரங்கள் குறித்த ஒப்பந்தம் ஒன்று, இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் கையெழுத்திடப்பட்டது.

இந்த ஒப்பந்தம் குறித்து அறிவித்த, திருப்பீடச் செய்தித் தொடர்பகம், காங்கோவில், திருஅவை மற்றும் நாட்டின் சுதந்திரத்தையும், தன்னாட்சியையும், நல்ல உறவுகளையும்  இருதரப்பும் மதித்தல் சட்ட அமைப்புகள் இந்த ஒப்பந்தத்தில் உள்ளன.

குறிப்பாக, காங்கோ குடியரசில், கத்தோலிக்கத் திருஅவை சட்டமுறைப்படி செயல்படுவற்கும், தலத்திருஅவை, தனது சக்திக்கு ஏற்ப, தனது திருத்தூது நடவடிக்கைகளை ஆற்றவும் வழியமைக்கப்பட்டுள்ளது.

கத்தோலிக்க கல்வி நிறுவனங்களையும், பள்ளிகளில் மறைக்கல்வி வகுப்புகளையும் நடத்தவும், இராணுவம், மருத்துவமனை, சிறைகள் போன்றவற்றில் ஆன்மீகப் பணியாற்றவும், துறவிகள், நாட்டிற்குள் செல்லவும், தங்குவதற்கும் அனுமதி அளிக்கவும், இன்னும், நாட்டின் பொதுவான விவகாரங்களில் ஆயர் பேரவைக்கும், அரசுக்கும் இடையே செயல்பாட்டுப் புரிதலுக்கும் இந்த ஒப்பந்தத்தில் வழியமைக்கப்பட்டுள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.