2016-05-21 15:14:00

அசாமில் கிறிஸ்தவர்க்கெதிராக எந்த வன்முறையும் இடம்பெறாது


மே,21,2016. அசாம் மாநிலத்தில், பாரதிய ஜனதா கட்சி முதன்முறையாக மாநிலத் தேர்தல்களில் வெற்றிபெற்றுள்ளவேளை, அம்மாநிலத்தில் கிறிஸ்தவர்க்கெதிராக எந்த வன்முறையும் இடம்பெறாது என்ற நம்பிக்கையைத் தெரிவித்துள்ளார் அம்மாநிலப் பேராயர் ஒருவர்.

புதிய அரசுடன் நல்ல உறவு ஏற்படும் என்று கிறிஸ்தவர்கள் எதிர்பார்ப்பதாகக் கூறிய, குவாஹாட்டி பேராயர் John Moolachira அவர்கள், கிறிஸ்தவர்க்கெதிராக எந்த வன்முறையும் இடம்பெறாமல் இருப்பதற்குத் தான் செபிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அசாமில், கடந்த 15 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி, ஆட்சி செய்து வந்தது. தற்போது நடந்து முடிந்த தேர்தலில், பாரதிய ஜனதா கட்சியும், அதன் உள்ளூர் கூட்டணிக் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. இவ்வெற்றி, பாரதிய ஜனதா கட்சிக்கு வரலாற்று நிகழ்வாகப் பேசப்படுகிறது.   

வடகிழக்கு இந்திய மாநிலமான அசாமின் மொத்த மக்கள் தொகையில் ஏறத்தாழ அறுபது விழுக்காட்டினர் இந்துக்கள். 3.7 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள். அம்மாநிலத்திலுள்ள ஐந்து மறைமாவட்டங்களில் ஏறத்தாழ ஆறு இலட்சம் கத்தோலிக்கர் உள்ளனர். 

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.