2016-05-19 15:40:00

எகிப்தில் கிறிஸ்தவ கோவில்கள் கட்டப்படுவதற்கு புதிய சட்டம்


மே,19,2016. எகிப்து நாட்டில் வழிபாட்டுத் தலங்களைக் கட்டுவதற்கு வழிவகுக்கும் ஒரு சட்ட வரைவு, அந்நாட்டு பாராளுமன்றத்தில், இச்செவ்வாயன்று சமர்ப்பிக்கப்பட்டதென்று CISA எனப்படும் ஆப்ரிக்க செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

ஒட்டமான் (Ottoman) காலத்திலிருந்து எகிப்தில் நடைமுறையில் உள்ள “Hamayoni” என்ற சட்டம், அந்நாட்டில் கிறிஸ்தவ கோவில்கள் கட்டப்படுவதை தடை செய்து வந்துள்ளது.

தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டவரைவின்படி, “Hamayoni” என்ற இந்தச் சட்டம் தளர்த்தப்பட்டு, கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்கள் கட்டப்படுவதற்கு புதிய வழிமுறைகள் வகுக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.

2014ம் ஆண்டு, எகிப்தில் உருவான இராணுவ அடக்குமுறையின்போது 40க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ ஆலயங்கள், சூறையாடப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டன என்றும், புதிய சட்ட வரைவின் அடிப்படையில், அழிக்கப்பட்ட இக்கோவில்கள் மீண்டும் கட்டியெழுப்பப்படலாம் என்று நம்பிக்கை உருவாகியுள்ளது என்றும் CISA செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

 ஆதாரம் : CISA / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.