2016-05-16 16:42:00

மாசடோனியாவில் திருப்பயணம் மேற்கொள்ள திருத்தந்தைக்கு அழைப்பு


மே,16,2016. முன்னாள் யுகோஸ்லாவியா குடியரசான மாசடோனியாவின் பாராளுமன்றத் தலைவரையும், பல்கேரிய அரசுத்தலைவரையும் இத்திங்களன்று காலை திருப்பீடத்தில் தனித்தனியே சந்தித்து உரையாடினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மாசடோனியாவின் பாராளுமன்றத் தலைவர் Trajko Veljanoski அவர்களையும், அவருடன் வந்த குழுவையும் திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், "Laudato sii", "Evangelii gaudium", "Amoris laetitia" ஆகிய மூன்று திருமடல்களின் பிரதிகளைப் பரிசாக, பாராளுமன்றத் தலைவருக்கு வழங்கினார். பாராளுமன்றத் தலைவர் வெலியானோஸ்கியும், பவளத்தால் பின்னப்பட்ட மகுடம் ஒன்றை, திருத்தந்தைக்குப் பரிசாக வழங்கினார். அண்மைக்கால திருத்தந்தையர்கள், மகுடத்தை அணிவதில்லை என்பதையும் சுட்டிக்காட்டிய பாராளுமன்றத் தலைவர், மாசடோனியாவின் துறவுமட அருள்சகோதரிகளால் உருவாக்கப்பட்ட இம்மகுடம், இச்சந்திப்பின் நினைவாக இருக்கட்டும் என்றார்.

மாசடோனியா நாட்டில், திருத்தந்தை, திருத்தூதுப்பயணம் மேற்கொள்ளுமாறு  அழைப்பும் விடுத்தார் பாராளுமன்றத் தலைவர் வெலியானோஸ்கி. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.