2016-05-16 16:48:00

கடற்கரையோர நகரங்கள் வெள்ள ஆபத்தில்...


மே,16,2016. கடல்மட்ட உயர்வு, புயல், கடும் காலநிலை மாற்றம் போன்றவற்றால், கடற்கரையோர நகரங்களில் வாழ்கின்ற நூறு கோடிக்கு மேற்பட்ட மக்கள், பெருவெள்ளத்தால் பாதிக்கப்படும் ஆபத்தை எதிர்நோக்குவார்கள் என்று, ஒரு கிறிஸ்தவப் பிறரன்பு நிறுவனம் எச்சரித்துள்ளது.

"இப்போதே செயல்படு அல்லது அதன் பலனை பின்னர் அனுபவிப்பாய் : காலநிலையால் அச்சுறுத்தப்பட்டுள்ள கடற்கரையோர நகரங்களில் நூறு கோடி மக்களைப் பாதுகாத்தல்" என்ற தலைப்பில், Christian Aid பிறரன்பு நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், அமெரிக்க ஐக்கிய நாடு, இந்தியா மற்றும் சீனாவில் வாழும் கடற்கரையோர நகர மக்கள் அதிக ஆபத்தில் உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் கொல்கத்தா, மும்பை, அமெரிக்க ஐக்கிய நாட்டின் மியாமி போன்ற நகரங்களின் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளது அவ்வறிக்கை.

இவ்வறிக்கையை தயாரித்த அந்நிறுவனத்தின், காலநிலை மாற்ற விவகாரம் பற்றிய ஆலோசகர் Alison Doig அவர்கள், இத்திங்களன்று வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில், உலகில் ஏற்கனவே New Orleans, Dhaka உட்பட பல நகரங்கள் வெள்ள அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன, இந்நிலை மேலும் மோசமாவதை நாம் பார்க்கப் போகிறோம் என்றும் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.