2016-05-14 14:49:00

கச்சத்தீவில் புதிய அந்தோணியார் ஆலயம்


மே,14,2016. கச்சத்தீவில் புதிய அந்தோணியார் ஆலயம் ஒன்றைக் கட்டத் தொடங்கியுள்ளது இலங்கை கடற்படை.

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்ததிலிருந்து கச்சத்தீவில் முகாம் அமைத்துள்ள இலங்கை இராணுவம், யாழ்ப்பாண ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் அவர்களின் வேண்டுகோளின்பேரில், புதிய அந்தோணியார் ஆலயம் ஒன்றைக் கட்டத் தொடங்கியுள்ளது என்று கூறப்படுகிறது.

ஒவ்வோர் ஆண்டும் அத்தீவில் நடைபெறும் புனித அந்தோணியார் விழாவுக்குச் செல்லும் ஆயிரக்கணக்கான மக்கள் விழாவைக் கொண்டாடுவதற்கு, தற்போதுள்ள ஆலயம் சிறியதாக இருப்பதால், புதிய ஆலயம் ஒன்றைக் கட்டுவதற்கு, யாழ்ப்பாண ஆயர் ஞானப்பிரகாசம் அவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இம்மாதம் 9ம் தேதி இப்புதிய ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 67 ஆயிரம் டாலர் செலவில் கட்டப்படவுள்ள இந்த ஆலயம், 2017ம் ஆண்டு பிப்ரவரியில், விழாக் கொண்டாட்டத்திற்குத் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கச்சத்தீவில், ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரியில் நடைபெறும் விழாவுக்கு தமிழகம் மற்றும் இலங்கையிலிருந்து திருப்பயணிகள் செல்கின்றனர்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.