அந்த நேர்முகத் தேர்வு முடிந்தது. ஒருவர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டார். வெற்றி பெற்றவரை, ஒருவர், முறைத்து, முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்பே இல்லை. “ஏன் அளவுக்கு அதிகமாக கவலைப்படுகிறீர்கள். இயல்பாக எடுத்துக் கொள்ளுங்கள். இது இல்லையென்றால் இன்னொரு நல்ல வேலை கிடைக்கும். மகிழ்ச்சியாக இருக்க முயலுங்கள்” என்றார் தேர்வில் வெற்றி பெற்றவர். தனக்கு அறிவுரை சொன்ன வெற்றியாளரிடம் வெறுப்புடன் சொன்னார் மற்றவர், “நீங்கள் வெற்றி பெற்றிருக்கிறீர்கள். எனவே மகிழ்ச்சியாய் இருக்கிறீர்கள். என்போல் தோல்வியைத் தழுவியிருந்தால் தெரியும்” என்று.
வெற்றியாளர் சொன்னார், “இல்லை நண்பரே! நான் வெற்றி பெற்றதால் மகிழ்ச்சியாய் இல்லை. மகிழ்ச்சியாய் இருப்பதால் வெற்றி பெற்றேன்!”
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |