2016-05-10 16:03:00

கனடாவில் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ளவர்க்கு செபம்


மே,10,2016. கனடாவின் வட பகுதியில், Alberta மாநிலத்தில் பரவிய காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும், தனது செபத்தையும், ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கனடாவில் Fort McMurray  பகுதியில் பரவிய காட்டுத் தீயால், ஏறத்தாழ ஒரு இலட்சம் பேர் வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர் மற்றும் 1,600 கட்டடங்கள் சேதமாகியுள்ளன.

அப்பகுதி ஆயர்களுக்கு, திருத்தந்தையின் பெயரில், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் அனுப்பியுள்ள கடிதத்தில், வீடுகளை இழந்துள்ள அனைத்து மக்களுக்காகவும், சிறப்பாக, சிறாருக்காகவும் திருத்தந்தை செபிப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Alberta மாநிலத் தலைநகர் Edmontonலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும், புலம்பெயர்ந்துள்ள மக்கள் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். இந்தக் காட்டுத் தீய்க்கு, காலநிலை மாற்றமே காரணமாகச் சொல்லப்படுகின்றது.

Fort McMurray  நகர்ப் பகுதியில், ஒரு இலட்சத்து நாற்பதாயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து, கடந்த 25 ஆண்டுகளில் அப்பகுதியின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.