2016-05-10 14:31:00

இது இரக்கத்தின் காலம் : பின்னே விழும் நிழலால் பிணி நீங்கும்


மற்றவர்களுக்கு நன்மைகள் செய்வதையே தன் வாழ்வின் மூச்சாகக் கொண்டு வாழ்ந்த ஒரு மகானுக்கு முன், இறைவன் தோன்றினார். அந்த மகானின் அற்புத வாழ்வுக்குப் பரிசாக, அவர் விழையும் ஒரு வரத்தை தருவதாகச் சொன்னார், இறைவன். தனக்கு எதுவும் வேண்டாம் என்று அந்த மகான் மறுத்தார். இருந்தாலும், இறைவன் விடுவதாகத் தெரியவில்லை. இறுதியாக, அந்த மகான், "இறைவா, என் நிழலைத் தொடும் அனைவரும் குணம் பெறும்படி வரம் தாரும்" என்று கேட்டார். இறைவன் அந்த வரத்தை மகிழ்வோடு தருவதாகச் சொன்னார். உடனே மகான் ஒரு நிபந்தனையைச் சொன்னார். "இறைவா, எப்போதெல்லாம் என் நிழல் எனக்குப் பின்னே விழுகிறதோ, அந்த நிழலுக்கு மட்டுமே, குணமளிக்கும் சக்தியை நீர் தரவேண்டும்" என்று அந்த மகான் வேண்டிக்கொண்டார்.

பலனையும், புகழையும் எதிர்பாராமல், நன்மைகள் செய்வோரைக் கொண்டாட, இரக்கத்தின் காலம் நம்மை அழைக்கிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.