2016-05-06 15:38:00

திருத்தந்தை, ஜெர்மன் சான்சிலர், தலைவர்கள் சந்திப்பு


மே,06,2016. ஷார்ல்மாக்ஞே (Charlemagne) விருது வழங்கும் நிகழ்வுக்கு முன்னர், ஜெர்மன் சான்சிலர் ஆஞ்சலா மெர்க்கெல் அவர்களைத் தனியாகவும், ஐரோப்பிய பாராளுமன்றத் தலைவர் Martin Schultz, ஐரோப்பிய ஆலோசனை அவைத் தலைவர் Donald Tusk, ஐரோப்பிய அவைத் தலைவர் Jean-Claude Juncker ஆகிய மூவரை ஒரே நேரத்திலும் வத்திக்கானில் சந்தித்துப் பேசினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜெர்மன் சான்சிலர் மெர்க்கெல் அவர்களிடம் 25 நிமிடங்கள் தனியே பேசியபோது ஐரோப்பாவின் ஒருங்கிணைப்பு மற்றும் எதிர்காலம் பற்றிய கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை. பின்னர், அமைதியின் தூதர் ஓவியத்தைப் பரிசாகக் கொடுத்தார் திருத்தந்தை. இதைப் பெற்றுக்கொண்ட மெர்க்கெல் அவர்கள், ஐரோப்பாவுக்கு அமைதி அதிகம் தேவை என்று கூறினார்.

ஐரோப்பிய நாடுகளின் ஒருங்கிணைப்பிற்காகச் சிறப்பான சேவையாற்றுபவர்க்கு, 1950ம் ஆண்டில், ஜெர்மனியில், ஆஹென் அனைத்துலக Charlemagne விருது உருவாக்கப்பட்டது. இந்த உயரிய சிறப்பு விருது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு, மே 06, இவ்வெள்ளியன்று வழங்கப்பட்டது. இதற்கு முன்னர், திருத்தந்தை புனித 2ம் ஜான்பால் அவர்களுக்கு, 2004ம் ஆண்டில் இவ்விருது வழங்கப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.