2016-05-06 16:08:00

ஆயுத மோதல்களில் 2015ல் 1,67,000 பேர் பலி


மே,06,2016. உலகளவில், 2015ம் ஆண்டில் இடம்பெற்ற ஆயுத மோதல்களில் இறந்தவர்களில், மூன்றில் ஒரு பகுதி சிரியாவில் இடம்பெற்றுள்ளது என்று, ஓர் ஆய்வு கூறுகிறது.

2015ம் ஆண்டில் இடம்பெற்ற ஆயுத மோதல்கள் குறித்து அறிக்கை வெளியிட்ட, International Institute for Strategic Studies(IISS) என்ற நிறுவனம், கடந்த ஆண்டில், ஆயுத மோதல்களில் ஏறத்தாழ ஒரு இலட்சத்து 67 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று கணக்கிட்டுள்ளது.

எனினும் 2014ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2015ம் ஆண்டில் ஒட்டுமொத்த இறப்பில் வீழ்ச்சிக் காணப்படுகிறது என, அவ்வறிக்கை கூறுகிறது.

ஆனால், ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க மற்றும் பிரித்தானியப் படைகள் சென்ற பின்னர், அந்நாட்டில் ஆயுத மோதல்களில் இடம்பெறும் உயிரிழப்புகள் நான்கு மடங்காகியுள்ளன என்றும், கடந்த 2015ம் ஆண்டில் மட்டும், ஏறத்தாழ 15 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது. 

ஆதாரம் : Agencies / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.