2016-05-04 16:06:00

பாகிஸ்தானில் கிறிஸ்தவரின் தபால்தலை வெளியீடு


மே,04,2016. பாகிஸ்தான் நாட்டின் வளர்ச்சியில் சிறுபான்மையினருக்கும் பங்கு உண்டு என்பதற்கு, கிறிஸ்தவரான Dewan Bahadur Singha அவர்கள் ஓர் எடுத்துக்காட்டு என்று, பாகிஸ்தான் அரசுத் தலைவர், Mamnoon Hussain அவர்கள் கூறினார்.

1947ம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான் பிரிவினை உருவானபோது, பாகிஸ்தான் நாட்டை உருவாக்கும் பஞ்சாப் அவையின் உறுப்பினராக செயலாற்றிய Dewan Bahadur அவர்கள் நினைவாக, தபால்தலையொன்றை வெளியிட்டபோது, அரசுத் தலைவர் Hussain அவர்கள் இவ்வாறு கூறினார்.

பாகிஸ்தான் நாட்டை உருவாக்கியதில், சிறுபான்மையினருக்கும் பங்கு உண்டு என்பதை அரசு இவ்விதம் அறிவித்துள்ளது முக்கியமான முயற்சி என்று, அமைதி மற்றும் மனித முன்னேற்ற அறக்கட்டளையின் தலைவர், Suneel Malik அவர்கள் ஆசிய செய்தியிடம் கூறினார்.

இந்திய பாகிஸ்தான் பிரிவின்போது, இஸ்லாமியர் மட்டுமே தியாகங்கள் செய்தனர் என்ற தவறான வரலாற்றுக் கண்ணோட்டத்தை Dewan Bahadur போன்றவர்கள் சரி செய்துள்ளனர் என்று, பெண் உரிமைக்காகப் போராடிவரும் கிறிஸ்தவ பெண்மணி  Shazia George அவர்கள் கூறினார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.