2016-05-04 16:16:00

இத்தாலிய கடற்படை வீரர்களை மன்னித்த இந்தியக் கைம்பெண்


மே,04,2016. இத்தாலிய கடற்படை வீரர்கள் இருவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்பது தன் விருப்பமல்ல; அவர்கள் இருவரும் மீண்டும் தங்கள் நாட்டுக்குச் செல்வதற்கு தனக்கு எவ்வித மறுப்பும் இல்லை என்று, கொல்லப்பட்ட இந்திய மீனவர்களில் ஒருவரான Valentine Jelastine என்பவரின் மனைவி கூறியுள்ளார்.

2012ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி, கேரள கடற்கரையில் மீன் பிடித்துக்கொண்டிருந்த  Valentine Jelastine, Ajesh Binki என்ற இரு மீனவர்களை, கடற் கொள்ளையர்கள் என்று தவறாகக் கருதி Salvatore Girone, Massimiliano Latorre என்ற இரு இத்தாலிய கடற்படை வீரர்கள் சுட்டதால், இந்திய மீனவர்கள் இருவரும் இறந்தனர்.

கடந்த நான்கு ஆண்டுகளாய் நடந்துவரும் இந்த வழக்கில், Hague Arbitral Tribunal என்ற ஐரோப்பிய நீதிக்குழு, காவலில் வைக்கப்பட்டுள்ள Salvatore Girone அவர்கள், வழக்கு முடியும்வரை இத்தாலிக்குத் திரும்பலாம் என்று இத்திங்களன்று வழங்கிய தீர்ப்பை அடுத்து, கைம்பெண் Dora Jelastine அவர்கள் இவ்வாறு கூறினார் என்று ஆசிய செய்திக் குறிப்பு கூறுகிறது.

இத்தாலிய வீரர்களில் ஒருவரான Massimiliano Latorre அவர்கள், உடல் நிலை காரணமாக 2014ம் ஆண்டு இத்தாலிக்குத் திரும்பிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.