2016-04-30 14:22:00

தீவிரவாதத்தை முறியடிப்பதற்கு சமயத் தலைவர்கள் உறுதி


ஏப்.30,2016. பங்களாதேஷில் வளர்ந்து வரும் சமயத் தீவிரவாதம் மற்றும் புரட்சிக்குழுக்களை முறியடித்து, மத நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்கு, அந்நாட்டின் நான்கு பெரிய சமயத் தலைவர்கள் உறுதியெடுத்துள்ளனர்.

டாக்காவில் பங்களாதேஷ் காவல்துறை நடத்திய பல்சமயக் கருத்தரங்கில் கலந்துகொண்ட முஸ்லிம், இந்து, கிறிஸ்தவ மற்றும் புத்த மதங்களின் தலைவர்கள், ஒன்றிணைந்து செயல்படுவதற்கு இசைவு தெரிவித்தனர்.

இக்கருத்தரங்கில் பேசிய, டாக்கா கத்தோலிக்கப் பேராயர் பாட்ரிக் டி ரொசாரியோ அவர்கள், நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதற்கு உதவும், பல்சமய உரையாடலும், முயற்சிகளும், சமயத் தீவிரவாதத்தை அடக்குவதற்கு இன்றியமையாதவை என்று கூறினார்.

மேலும், பங்களாதேஷில், இஸ்லாமியப் புரட்சியாளர்க்கெதிரான நடவடிக்கைக்கு ஆதரவாக, ஒரு இலட்சம் இஸ்லாமியக் குருக்களிடமிருந்து கையெழுத்து வாங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.   

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.