2016-04-29 15:19:00

ஆந்திராவில் கத்தோலிக்க ஆயர் தாக்குதல்


ஏப்.29,2016. ஆந்திர மாநிலத்தில் கத்தோலிக்க ஆயர் ஒருவர்க்கு எதிராகக் கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதற்கு, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் பல்வேறு கிறிஸ்தவ அமைப்புகள், தங்களின் கடும் கண்டனங்களை வெளியிட்டுள்ளன.

கடப்பா மறைமாவட்ட ஆயர் Gallela Prasad அவர்கள், Karunagariயில் திருப்பலி நிறைவேற்றிவிட்டு, காரில் திரும்பி வந்துகொண்டிருந்தபோது, இனம் தெரியாத நபர்கள், ஆயர் மற்றும் வாகன ஓட்டுனரின் கண்களைக் கட்டி, தெரியாத ஓரிடத்தில் அடைத்து வைத்தனர். அங்கு அவர்களை, இரவு முழுவதும் பல மணிநேரங்கள் தாக்கியுள்ளனர். ஏப்ரல் 25, கடந்த திங்களன்று இடம்பெற்ற நிகழ்வு, இவ்வியாழனன்று பொதுவில் அறிவிக்கப்பட்டது.

இவ்வன்முறை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள, ஹைதராபாத் பேராயர் தும்ம பாலா அவர்கள், இந்த வன்முறைக் கொடுமைகள், சிறுபான்மை சமூகத்தின் மூத்த உறுப்பினர்க்கு எதிராக நடத்தப்பட்டிருப்பது வியப்பளிக்கின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆந்திர மாநிலத்தில், கிறிஸ்தவர்க்கு எதிராக வன்முறைகள் ஏற்கனவே நடத்தப்பட்டிருந்தாலும், சமயத் தலைவர்களுக்கு எதிராக இடம்பெற்றிருப்பது இதுவே முதன்முறை என்று சொல்லப்படுகிறது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.