2016-04-26 14:00:00

பொலிவிய அரசின் போதைப்பொருள் கொள்கைக்கு எதிர்ப்பு


ஏப்.26,2016. தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் இடம்பெறும் கொக்கேய்ன் போதைப்பொருள் வர்த்தகத்திற்கு எதிரான, தங்களின் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.

பொலிவிய அரசின் ஊழல், போதைப்பொருள் வர்த்தகத்தை ஊக்குவிக்கின்றது என்று, மேய்ப்புப்பணி அறிக்கையில் குறை கூறியுள்ள ஆயர்கள், வன்முறை, ஊழல், ஏமாற்று, அநீதிகள் மற்றும் இறப்புகளுக்குப் போதைப்பொருள் வர்த்தகம் காரணமாகியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

போதைப்பொருள் வர்த்தகத்தை நடத்தும் அரசு அதிகாரிகளின் ஊழல், அவர்கள் மீது நம்பகத்தன்மையைக் குறைத்துள்ளது மற்றும், சட்டத்துக்குப் புறம்பேயான வர்த்தகம் தொடர்ந்து இடம்பெற அனுமதிக்கின்றது என்றும், ஆயர்களின் அறிக்கை கூறுகின்றது.  

இதற்கிடையே, பொலிவிய ஆயர்களின் மேய்ப்புப்பணி அறிக்கைக்குக் கண்டனம் தெரிவித்துள்ள, அரசுத்தலைவர் ஈவோ மொராலெஸ் அவர்கள், திருஅவைத் தலைவர்கள் காலனி ஆதிக்க மனநிலையைக் கொண்டிருக்கின்றனர் என்று குறை கூறியுள்ளார்.

ஆதாரம் : CWN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.