2016-04-23 16:05:00

Laudato sì, இந்தோனேசிய சுற்றுச்சூழல் கொள்கைக்கு வழிகாட்டி


ஏப்.23,2016. சுற்றுச்சூழல் குறித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், Laudato sì திருமடல், இந்தோனேசிய அரசின் சுற்றுச்சூழல் கொள்கையை மேம்படுத்துவதற்கு, வழிகாட்டியாக உள்ளது என்று அந்நாட்டு அரசு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இந்தோனேசியாவின் Nusa Tenggara மாவட்ட ஆட்சித்தலைவர் Kamelus Deno அவர்கள், Laudato sì திருமடல் பற்றி இவ்வெள்ளியன்று பேசியபோது, மாவட்ட அரசின் வளர்ச்சித் திட்ட கொள்கைகளுக்கு மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலை மதிப்பது குறித்த திட்டங்களுக்கும் உதவுவதாய் அமைந்துள்ளது என்று கூறினார்.

பூமி தினத்தை முன்னிட்டு, அம்மாநிலத்தில் பணியாற்றும் பிரான்சிஸ்கன் சபை அருள்பணியாளர் பீட்டர் ஆமன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசியபோது இவ்வாறு தெரிவித்தார் Kamelus Deno.

Nusa Tenggara மாவட்டத்தில், 19 ஆயிரம் ஹெக்டர் நிலப்பரப்பில், 14 கனிமவளச் சுரங்கங்கள் இயங்குகின்றன. சில சுரங்கங்களுக்கு, காடுகளை ஆக்ரமிக்கும் அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது என்று ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.