2016-04-22 15:50:00

மரண தண்டனை கைதிக்கு உதவ இந்தோனேசிய ஆயர்கள்


ஏப்.22,2016. இந்தோனேசியாவில், போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பாக, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள, ஒரு கத்தோலிக்கருக்கு உதவுவதற்கு, அந்நாட்டு ஆயர்கள் முயற்சித்து வருகின்றனர்.

கிறிஸ்டியான் என்ற 54 வயது நிரம்பிய கத்தோலிக்கப் பொதுநிலை விசுவாசி, 2007ம் ஆண்டு நவம்பரில், போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பாகக் கைதுசெய்யப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.

இவருக்குச் சட்ட முறைப்படி உதவிகள் வழங்குவதற்கு, முன்வந்துள்ள 11 தன்னார்வல வழக்கறிஞர்கள், கிறிஸ்டியான் அவர்களுக்கு, நீதியான விசாரணைகள் கிடைக்கவில்லை என்பதற்குப் புதிதாகச் சான்றுகள் கிடைத்துள்ளன என்று கூறுகின்றனர்.

மேலும், இந்தோனேசியாவில், நியாயமற்ற விசாரணைகளின் விளைவாக, குறைந்தது 300 மரண தண்டனை கைதிகள் உள்ளனர் என்பதையும், இந்த வழக்கறிஞர்கள் குழு கண்டுபிடித்துள்ளது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.