2016-04-22 16:15:00

உலக பூமி தினம், மரங்களுக்கு மரியாதை


ஏப்.22,2016. “இப்பூமிக்காக மரங்கள்” என்ற சுலோகத்துடன், நூறு கோடிக்கு மேற்பட்ட மக்கள், இவ்வெள்ளியன்று, உலக தாய்ப் பூமி தினத்தைச் சிறப்பித்தனர்.

உலக பூமி தினத்தன்று, உலக வெப்பநிலையை 2 செல்சியுஸ் டிகிரிக்குமேல் அதிகரிக்காமல் கட்டுப்படுத்துவதற்கு நாடுகளை வலியுறுத்தும் ஒப்பந்தம் ஒன்றும் பாரிசில் கையெழுத்திடப்பட்டது.

இப்பூமியின் வெப்பநிலையைக் குறைப்பதற்கு மரங்கள் முக்கியமானவை என்பதை உணர்ந்த தலைவர்கள், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள், 780 கோடி மரங்களை நடுவதற்குத் திட்டமிட்டுள்ளனர்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், தனது Laudato sì திருமடலில், நம் பொதுவான இல்லத்தைப் பாதுகாப்பது பற்றி வலியுறுத்தியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.