2016-04-13 15:15:00

கர்தினால் தாக்லே : நவீனத் தீமைகளுக்கு இரக்கமே மருந்து


ஏப்.13,2016. உயிர்த்த கிறிஸ்துவால்கூட அகற்ற முடியாத பல காயங்களை இவ்வுலகம் கொண்டிருக்கின்றது என்று, மனிலா கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள் கூறினார்.

உயிர்ப்பு ஞாயிறைத் தொடர்ந்து, மெட்ரோ மனிலாவில் நடைபெற்ற ஆண்டுத் தியானத்தில், நவீனத் தீமைகள் பற்றி உரையாற்றிய கர்தினால் தாக்லே அவர்கள்,  இரக்கம் மற்றும் பரிவன்பை உண்மையிலேயே அனுபவிப்பதற்கு, விசுவாசிகள், சமுதாயத்தின் காயங்களைப் பார்த்து, அவற்றைத் தொட வேண்டும் என்று கூறினார்.

குடும்பத்தில் பிரமாணிக்கமின்மை, ஊட்டச்சத்துப் பற்றாக்குறை, கலாச்சாரப் பெருமை உணர்வு, தன்னலப்போக்கு, இனவாதம், சமூக ஊடகங்களைத் தவறாகப் பயன்படுத்தல், திருஅவைக்குள் இடம்பெறும் உரிமை மீறல்கள், புறக்கணிப்புகள் போன்ற சமுதாயத்தின் காயங்களைக் குறிப்பிட்டுப் பேசினார் கர்தினால் தாக்லே.

குடும்பத்தில் உறவுகள் இல்லாமல் இருப்பது, ஆழமான காயங்களை ஏற்படுத்துகின்றன, இதைக் குழந்தைகளும், பேரப்பிள்ளைகளும் கற்றுக்கொள்ளக் கூடும் என்றும் எச்சரித்தார் கர்தினால் தாக்லே.

ஆதாரம் : CBCP / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.