2016-04-05 15:40:00

ஊழலற்ற தேர்தலுக்கு பிலிப்பைன்ஸ் திருஅவை நடவடிக்கை


ஏப்ரல்,05,2016. பிலிப்பைன்ஸ் நாட்டில் பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு ஏறக்குறைய ஐந்து வாரங்களே உள்ளவேளை, அந்நாட்டில், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் இடம்பெறுவதற்கு, தலத்திருஅவை தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

பொய்யர்கள், கடவுள் நம்பிக்கையற்றவர்கள் மற்றும் வன்முறையைத் தூண்டும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாமெனக் கேட்டுள்ளனர் ஆயர்கள்.

கடந்த ஞாயிறன்று அறிக்கை வெளியிட்டுள்ள, Dipolog ஆயர் Severo Caermare அவர்கள், தங்களை அடிமையாக்கும் அனைத்திலுமிருந்து விடுதலை பெறுமாறும், கடந்த காலத்தில் நடந்தவைகளைக் கண்முன்கொண்டு வருகின்ற தேர்தலில் ஓட்டளிக்குமாறும் வாக்காளர் பெருமக்களைக் கேட்டுள்ளார்.

மேலும், பேராயர் சாக்ரட்டீஸ் வில்லெகாஸ் அவர்கள், வெளியிட்டுள்ள அறிக்கையில், பொய் சொல்வது, பன்முகங்களைக் கொண்ட சாத்தானின் வேலையாகும் என்றும், மக்கள், ஞானத்துடன் செயல்பட்டு, பொய்யர்களுக்கு ஓட்டளிக்க வேண்டாமெனக் கூறியுள்ளார்.

ஆதாரம் : UCAN /  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.