2016-04-02 15:35:00

புரட்சிக்குழுக்கள் உருவாவதற்கு கென்ய சமய அவை கண்டனம்


ஏப்.02,2016. கென்யாவில் நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தல், அந்நாட்டுக் குடிமக்களுக்கு வாழ்வா? அல்லது சாவா? என்ற அச்சுறுத்தலை முன்வைத்துள்ளது என்று அந்நாட்டுச் சமயத் தலைவர்கள், அரசியல்வாதிகளிடம் கூறியுள்ளனர்.

2017ம் ஆண்டில் நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலுக்குத் தயாரிப்பு என்ற தலைப்பில், அறிக்கை வெளியிட்டுள்ள கென்யச் சமயத் தலைவர்கள், அரசியல்வாதிகள் தங்களின் சொந்த ஆதாயங்களைக் கைவிட்டு, தேர்தல் காலத்தில் குடிமக்களின் வாழ்வுக்கு உறுதியளிக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.

கென்ய கத்தோலிக்க ஆயர் பேரவை, பிற கிறிஸ்தவ சபைகள் அவை, முஸ்லிம் மற்றும் இந்து மதப் பிரதிநிதிகள் அடங்கிய, கென்ய சமய அவை வெளியிட்ட, பொதுத் தேர்தல் குறித்த அறிக்கையில், வன்முறை அமைப்புகளை உருவாக்காமல், அமைதிக்கான வழிகளைத் தேடுமாறு, அரசியல்வாதிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

பல்வேறு மட்டத்திலுள்ள அரசியல்வாதிகள் மற்றும் அரசியலில் நுழைய முயற்சிப்பவரின் நடவடிக்கைகளால், தாங்கள் நம்பிக்கை இழந்திருப்பதாகவும், இந்நடவடிக்கைகள், வன்முறையில் ஈடுபடும் புரட்சிக்குழுக்களை உருவாக்குவதாகவும் அவ்வறிக்கை எச்சரிக்கின்றது.      

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.