2016-04-02 15:41:00

திருத்தந்தை பயணித்த வாகனம் பெரும் தொகைக்கு ஏலம்


ஏப்.02,2016. கடந்த 2015ம் ஆண்டில், அமெரிக்க ஐக்கிய நாட்டுத் திருத்தூதுப் பயணத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பயன்படுத்திய, கருப்பு நிற Fiat 500 Lounge hatchbacks வாகனம், மூன்று இலட்சம் டாலர்க்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.

Charitybuzz என்ற இணையதள ஏலம் மூலம் விற்கப்பட்ட இந்த வாகனம், அதன் சாதாரண விலையைவிட பன்னிரெண்டு மடங்கு அதிகமான விலைக்கு விற்பனையாகியுள்ளது.

இந்த வாகனத்தை, கார்கள் மற்றும் மோட்டர்பைக்குகளை வாங்கிச் சேகரிக்கும், கோடீஸ்வர யூத வர்த்தகரான Miles Nadal அவர்கள் விலைக்கு வாங்கியுள்ளார்.

இந்த ஏலத்தின் மூலம் கிடைத்த தொகை, கத்தோலிக்கப் பள்ளிகள் மற்றும் அறக்கட்டளைகளுக்கு அளிக்கப்படவுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : பிபிசி / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.