2016-04-02 15:16:00

ஆட்டிசத்தால் பாதிப்புள்ளவர்கள் சமூகத்தில் சேர்க்கப்பட..


ஏப்.02,2016. ஆட்டிசம் என்ற குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை வெறுத்து ஒதுக்குதல், அவர்களின் மனித உரிமைகளை மீறுவதாகும் மற்றும் மனிதத் திறமையை வீணடிப்பதாகும் என்று ஐ.நா. அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, இவ்வெள்ளியன்று  இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய ஐ.நா. பொது அவைத் தலைவர் Mogens Lykketoft அவர்கள், ஆட்டிசம் என்ற மூளை வளர்ச்சி குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் சமுதாயத்திற்கு வழங்கிவரும் நன்மைகளை நினைவுபடுத்தினார்.

உலகில், 68 பேருக்கு ஒருவர் வீதம், அதாவது, உலக மக்கள் தொகையில் ஏறக்குறைய ஒரு விழுக்காட்டினர் ஆட்டிசம் என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், இவர்களில் பெரும்பாலனவர்கள் சிறார் என்றும் கூறினார் Lykketoft.

மேலும், இவ்வுலக தினத்திற்கென செய்தி வெளியிட்டுள்ள ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் அவர்கள், உலகின் பல நாடுகளில் ஆட்டிசம் பற்றிய தெளிவான புரிதல் இல்லை என்றும், இந்த மக்களை பல சமூகங்கள் ஒதுக்கி வைக்கின்றன என்றும் குறை கூறியுள்ளார்.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.