2016-04-01 15:23:00

சீனாவில் சமய சுதந்திரத்திற்கு பிராக் பேராயர் அழைப்பு


ஏப்.01,2016. சீனாவில், மனித உரிமைகளும், சமய சுதந்திரமும் மதிக்கப்படுமாறு, செக் குடியரசின் தலத்திருஅவை அதிகாரி ஒருவர், சீன அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

சீன அரசுத்தலைவர் Xi Jinping அவர்கள், செக் குடியரசுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, விண்ணப்பக் கடிதமொன்றைச் சமர்ப்பித்த பிராக் பேராயர் Dominik Jaroslav Duka அவர்கள், சீனாவில், மனித உரிமைகளும், சமய சுதந்திரமும் மதிக்கப்படுவதற்கு அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார்.

சீன அரசுத்தலைவர் Xi அவர்களைச் சந்தித்தபோது, இவ்விண்ணப்ப கடிதத்தையும்,  1948ம் ஆண்டுக்குப் பின்னர், முன்னாள் செக்கோஸ்லோவாக்கிய கம்யூனிச அரசால் தடை செய்யப்பட்ட Bohuslav Reynek அவர்களின் நூல் ஒன்றையும் அளித்தார் பேராயர் Dominik Duka.

சீன அரசுத்தலைவர் Xi அவர்கள், செக் குடியரசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, சீனாவுக்கும், செக் குடியரசுக்கும் இடையே, வர்த்தகம் சார்ந்த ஏறக்குறைய 30 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இவை, சுற்றுலா, வங்கி, எரிசக்தி, மற்றும் வாகன உற்பத்தியில், இவ்வாண்டில், ஏறக்குறைய நானூறு கோடி டாலர் முதலீட்டை ஊக்குவிக்கும் என்று ஊடகங்கள் கூறுகின்றன.

ஆதாரம் : Asianews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.