2016-03-31 15:42:00

உரோமையில் அப்போஸ்தலிக்க இரக்கத்தின் ஐரோப்பிய மாநாடு


மார்ச்,31,2016. மார்ச் 31, இவ்வியாழனன்று அப்போஸ்தலிக்க இரக்கத்தின் ஐரோப்பிய மாநாடு, உரோம் நகரில் துவங்கியுள்ளது.

World Apostolic Congress on Mercy அல்லது, குறுகிய வடிவில் WACOM என்றழைக்கப்படும் இவ்வமைப்பின் மாநாடு, மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை கூடும். இவ்வமைப்பின் முதல் உலக மாநாடு 2008ம் ஆண்டு, உரோம் நகரில் நடைபெற்றது. 2011ம் ஆண்டு, போலந்து நாட்டின் கிராக்கோவ் நகரிலும், 2014ம் ஆண்டு கொலம்பியா நாட்டின் தலைநகர் Bogotá விலும் நடைபெற்றன.

இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டையொட்டி, உரோம் நகரில் நடைபெறும் ஐரோப்பிய .... மாநாட்டில் கலந்துகொள்ளும் அனைவரோடும், ஏப்ரல் 2 மாலை, புனித பேதுரு வளாகத்தில் நடைபெறும் திருவிழிப்பு வழிபாட்டிலும், ஏப்ரல் 3, இறை இரக்கத்தின் ஞாயிறன்று காலை அதே வளாகத்தில் நடைபெறும் திருப்பலியிலும் திருத்தந்தை கலந்துகொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2017ம் ஆண்டு, WACOM அமைப்பின் உலக மாநாடு பிலிப்பின்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில், இரக்கத்தால் அழைக்கப்பட்டு, இரக்கத்தால் அனுப்பப்படுதல்' என்ற மையக்கருத்துடன்  நடைபெறும் என்று, இவ்வமைப்பு அறிவித்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.