2016-03-21 16:29:00

இஸ்பெயின் விபத்தில் பாதிப்படைந்தோருக்கு பாப்பிறையின் தந்தி


மார்ச்,21,206. இஸ்பெயின் நாட்டின் Freginals பகுதியில் இஞ்ஞாயிறன்று இடம்பெற்ற சாலை விபத்தில் உயிரிழந்தோர், மற்றும் காயமடைந்துள்ளவர்களுடன் தன் ஒருமைப்பாட்டையும், விபத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தன் செப உறுதியையும் வழங்கி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இரங்கல் தந்தியொன்றை அனுப்பியுள்ளார்.

இஸ்பெயின் நாட்டின் Tortosa ஆயர், Enrique Benavent Vidal அவர்களுக்கு, திருத்தந்தையின் பெயரால், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் அனுப்பியுள்ள இத்தந்தியில், இறந்தோரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக தான் செபிப்பதாகவும், பாதிக்கப்பட்டோருக்கு தன் அனுதாபங்களையும் தெரித்துள்ளார், திருத்தந்தை.

வெளிநாட்டுப் பல்கலைக் கழக மாணவர்களை ஏற்றிவந்த பேருந்து ஒன்று, இஸ்பெயின் நாட்டின் வலென்சியா மற்றும் பார்சலோனா நகரங்களுக்கிடையே விபத்திற்குட்பட்டதில், 13 பேர் உயிரிழந்தனர், 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

மேலும், "நம்முடைய கிறிஸ்தவ அழைப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து, விசுவாசிகளாக வாழ்வதற்கு நம்மை அர்ப்பணிப்போம்" என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக மார்ச் 21, இத்திங்களன்று வெளியிடப்பட்டது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.