2016-03-18 15:19:00

இது இரக்கத்தின் காலம்... : பிறப்பு, இறப்பிலிருந்து விடுதலை


கோஷு என்பவர் யூ-இ என்ற ஒரு ஜென் குருவிடம் வந்தார்.

"நான் பல ஆண்டுகளாக ஜென் பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். ஆனால், இன்னும் வெற்றி பெறவில்லை. எனக்கு வழிகாட்டி அருளுங்கள்" என்று கூறினார்.

யூ-இ கூறினார், ‘ஜென் பயிற்சியில் எந்த இரகசிய ஜால வேலையும் கிடையாது. பிறப்பு, இறப்பிலிருந்து விடுதலை பெறுவதே அது!’ என்று.

‘பிறப்பு-இறப்பிலிருந்து ஒருவர் எப்படி விடுதலை பெறுவது?’ என்று கேட்டார் கோஷு.

‘உன்னுடைய ஒவ்வோர் எண்ணமுமே பிறப்பு, இறப்புதான்!’ என சற்றுக் குரலை உயர்த்திச் சொன்னார்  யூ-இ.

இந்த வார்த்தைகளைக் கேட்டவுடன் கோஷு பரவசமடைந்தார். ஒரு பெரும் சுமையைக் கீழே இறக்கி வைத்த உணர்வு அவருக்கு ஏற்பட்டது! 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.