மார்ச்,16,2016. ‘ஒப்புரவு அருளடையாளத்தின்போது, நாம் மறுபிறப்படைகிறோம்; அந்த அருளடையாளத்தில் நாம் பெரும் சக்தி, நமது நம்பிக்கையை வளர்க்கிறது’ என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இப்புதனன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியாக அமைந்தன.
அதேவண்ணம், திருத்தந்தை அவர்கள் இச்செவ்வாயன்று வெளியிட்ட செய்தியில், 'இறைவன் இரக்கம் நிறைந்தவர், உண்மையான உள்ளத்துடன் அவரது இரக்கத்தைத் தேடுவோருக்கு, அதை நிறைவாக வழங்குகிறார்' என்ற வார்த்தைகள் இடம்பெற்றன.
திருத்தந்தை வழங்கிவரும் டுவிட்டர் செய்திகளில், இரக்கத்தின் யூபிலி ஆண்டையொட்டி, இரக்கம் மற்றும் ஒப்புரவு அருளடையாளம் ஆகிய எண்ணங்கள் அடிக்கடி இடம்பெறுகின்றன.
@pontifex என்ற முகவரியுடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுவரும் டுவிட்டர் செய்திகள், ஒவ்வொரு நாளும், இத்தாலியம், இஸ்பானியம், ஆங்கிலம், பிரெஞ்ச், போர்த்துகீஸ், போலிஷ், ஜெர்மன், மற்றும் ஆரேபியம் ஆகிய எட்டு மொழிகளில் வெளியாகிவருகின்றன.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |