2016-03-12 16:53:00

சிரியாவில் அமைதி திரும்ப கத்தோலிக்க பிறரன்பு அமைப்பு அழைப்பு


மார்ச்,12,2016 இரண்டரை இலட்சம் மக்களைப் பலிவாங்கி, 5 ஆண்டுகளாக, சிரியாவில் இடம்பெற்றுவரும் போரை முடிவுக்குக் கொண்டுவர, அனைத்துத் தரப்பினரும் முன்வரவேண்டும் என CAFOD என்ற கத்தோலிக்க பிறரன்பு அமைப்பு, அழைப்பு விடுத்துள்ளது.

1 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் சொந்த வீடுகளிலிருந்து அகதிகளாக வெளியேறியுள்ள நிலையில், அவர்களுக்கு உணவு உதவிகளை வழங்கவேண்டும் என்ற நோக்கிலாவது, அமைதி திரும்புவது அவசியம் என CAFOD அமைப்பு விண்ணப்பித்துள்ளது.

நாட்டின் கட்டுமான அமைப்பு முறைகள், பொருளாதாரம், நீர் ஆதாரம், மின்சாரம் போன்றவை மட்டுமல்ல, வருங்கால தலைமுறையின் கல்வியும் சிரியாவில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது என, தன் கவலையை வெளியிட்டுள்ளது கத்தோலிக்க உதவி அமைப்பான CAFOD. 

ஆதாரம் : IndCathNews/வத்திக்கான் வானொலி

 








All the contents on this site are copyrighted ©.