2016-03-08 14:15:00

இது இரக்கத்தின் காலம் : பெண்மையும், மென்மையும், மேன்மையே...


'பெண்மை' என்று சொன்னதும், 'மென்மை' என்ற எண்ணமும் தொடர்கிறது. இது தவறல்ல. ஆனால், 'மென்மை' என்ற சொல்லுக்குள், 'அச்சம், மடம், நாணம்... அடக்கம்' என்று, சங்கிலித் தொடராய் பல அர்த்தங்களை அடுக்கி, முடிவில், 'பெண்மை' அல்லது, 'மென்மை' என்றாலே, 'அடிமைத்தனம்' என்று இலக்கணம் வகுப்பது, தவறு, அநீதி. பெண்மைக்குரிய மென்மையில், 'மேன்மை' உள்ளது என்ற உண்மையை உலகம் உணர்வதற்கு, ஒவ்வோர் ஆண்டும், மார்ச் 8ம் தேதி நாம் கொண்டாடும் உலக மகளிர் நாள் அழைப்பு விடுக்கிறது.

'மென்மை'யுடன், 'மேன்மை'யைப் பறைசாற்றியவர், பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசப்சாய் (Malala Yousafzai) என்ற இளம்பெண். அடிப்படைவாதிகள், தன் முகத்தை, துப்பாக்கிக் குண்டால் துளைத்தபோதும் அஞ்சாது, பெண்கல்விக்கென போராடிவரும் மலாலா அவர்கள் கூறிய பல கருத்துக்கள், பெண்மைக்குரிய, உண்மையான, உயர்ந்த இலக்கணம் தந்துள்ளன. இதோ, அவரது பொன்மொழிகளில் சில:

பெண்மையின் மேன்மையைச் சரிவரப் புரிந்துகொள்ள, இரக்கத்தின் காலம் தகுந்ததொரு தருணம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.