2016-03-07 15:26:00

மியான்மாரில் பெண்களுக்கு எதிரான வன்முறை நிறுத்தப்பட அழைப்பு


மார்ச்,07,2016. மியான்மாரில் பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பாகுபாடுகள் நிறுத்தப்பட வேண்டும் என்று, அந்நாட்டு நான்கு முக்கிய மதங்களின் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

யாங்கூனை மையமாகக் கொண்டு இயங்கும் அமைதிக்கான ஐ.நா. பெண்கள் மற்றும் மதங்கள் அமைப்பு, உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, யாங்கூனில் ஏற்பாடு செய்த மூன்று மணி நேர விவாதமேடையில், புத்தம், கிறிஸ்தவம், இஸ்லாம் மற்றும் இந்து மதங்களின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் பேசிய, ஐ.நா.வின் மியான்மார் பெண்கள் அமைப்பின் தலைவர் Jean D'Cunha அவர்கள், மியான்மாரில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களில், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையே அதிகம் என்று கூறினார்.

தென்கிழக்கு ஆசியாவில், பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பாகுபாடுகள் முக்கிய பிரச்சனையாக உள்ளது.

மார்ச் 08, உலக மகளிர் தினமாகும்.  

ஆதாரம் : The Myanmar Times/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.