2016-03-01 15:14:00

மதத்தினர் இரக்கத்தைக் கற்றுக்கொள்வதற்கு அன்னை தெரேசாவின் வழி


மார்ச்,01,2016. இரக்கப் பண்பைக் கற்றுக்கொள்வதற்கு எல்லா மதங்களின் திருப்பயணிகளும் அருளாளர் அன்னை தெரேசா வழியைப் பின்பற்ற வேண்டுமென்று, ஆஸ்திரேலிய பல்சமய திருப்பயணிகள் குழு ஒன்று கூறியது.

பல்சமய உரையாடலுக்கு உயிரூட்டம் அளிக்கும் நோக்கத்தில், டெல்லி, வாரனாசி, புத்த கயா உட்பட இந்தியாவின் பல மதங்களின் திருத்தலங்களுக்குத் திருப்பயணம் மேற்கொண்டுவரும், எட்டு ஆஸ்திரேலிய பல்சமயக் குழு, கொல்கத்தா சென்று அருளாளர் அன்னை தெரேசா அவர்கள் கல்லறையையும் தரிசித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் மெல்பர்ன் உயர்மறைமாவட்ட பல்சமயப் பணிக்குழுவின் தலைவர் அருள்பணி John Dupuche அவர்கள் தலைமையில், இந்த ஆஸ்திரேலிய பல்சமயக் குழு, இந்தியாவில் பல மதங்களின் திருத்தலங்களைச் சந்தித்து வருகிறது.

பணியாற்றுவது எப்படி என்பதை, கிறிஸ்தவர்களுக்கு மட்டுமல்ல, எல்லா மதத்தினருக்கும் அன்னை தெரேசா கற்றுக்கொடுக்கிறார் என்று அக்குழு கூறியது. 

ஆதாரம் : AsiaNews /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.