2016-02-27 15:54:00

நைஜீரிய ஆயர்கள் அரசுக்கு முன்வைத்துள்ள கோரிக்கைகள்


பிப்.27,2016. நைஜீரியாவில் போக்கோ ஹாரம் வன்முறைக்கு முடிவு காணுதல், ஊழலை ஒழித்தல், மக்களின் பொதுவான வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்குப் பொருளாதாரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றில் அரசு கவனம் செலுத்துமாறு  அந்நாட்டு ஆயர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

2016ம் ஆண்டில் தங்களின் முதல் நிறையமர்வு கூட்டத்தை நிறைவு செய்துள்ள நைஜீரிய ஆயர்கள், போக்கோ ஹாரம் தீவிரவாதக் குழுவின் வன்முறைகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் தங்கள் உயிரை இழந்த தேசிய இராணுவப் படையினருக்குத் தங்களின் அஞ்சலியையும் செலுத்தியுள்ளனர்.

ஊழலை ஒழிப்பது குறித்த தங்களின் பரிந்துரையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரக்கத்தின் யூபிலி ஆண்டில் விடுத்துள்ள விண்ணப்பங்களைக் குறிப்பிட்டு, ஊழல் மாபெரும் பாவம், இது சமுதாய மற்றும் தனிப்பட்டவரின் வாழ்வின் அடித்தளத்தையே அச்சுறுத்துகின்றது என்று கூறியுள்ளனர் நைஜீரிய ஆயர்கள்.  

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.