2016-02-27 13:35:00

இது இரக்கத்தின் காலம் - எங்கும் நிறைந்திருப்பது, இறை இரக்கம்


"இறந்துபோன என் தாத்தா கத்தோலிக்கர் அல்ல. அவர் விண்ணகத்திற்குப் போவாரா?" என்ற கேள்வியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு ஒரு சிறுவன் அனுப்பியிருந்தான். சீனாவைச் சேர்ந்த எய்டென் என்ற அச்சிறுவன் அனுப்பியிருந்த கேள்விக்கு, 'அர்ஸ் நகரின் வழிகாட்டி' (Curé d'Ars) என்று புகழ்பெற்ற புனித ஜான் மரிய வியான்னி அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வைச் சுட்டிக்காட்டி, திருத்தந்தை பதில் சொன்னார். இதோ அந்நிகழ்வு:

ஒருநாள், புனித வியான்னியைத் தேடி வந்த ஒரு பெண்மணி, தன் கணவர், பாலத்தின் மேலிருந்து குதித்து, தற்கொலை செய்துகொண்டார் என்று கூறினார். அவர் செய்த பாவத்தால், கட்டாயம் நரகத்திற்குத்தான் சென்றிருப்பார் என்ற தீர்மானத்தில், அப்பெண் கதறி அழுதார். அப்போது, புனித வியான்னி, அப்பெண்ணிடம், "மகளே, அந்தப் பாலத்திற்கும், ஓடுகின்ற ஆற்றுக்கும் இடையே, இறைவனின் இரக்கம் நிறைந்திருக்கிறது. அதை நீ புரிந்துகொள்ள வேண்டும்" என்று கூறி, அப்பெண்ணை அமைதிப்படுத்தி அனுப்பினார்.

எங்கும் நிறைந்திருப்பது, இறை இரக்கம்; எச்சூழலிலும், எவ்வேளையிலும், எல்லாரையும் காக்கக்கூடியது, இறைவனின் இரக்கம் என்பதை உணர, இரக்கத்தின் யூபிலி ஆண்டு தகுந்த தருணம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.