2016-02-24 16:12:00

"மாற்றுருவில் வரும் இயேசு" – அமெரிக்காவில் தவக்கால நிதி


பிப்.24,2016. துன்புறும் நம் சகோதர சகோதரிகளுடன் கிறிஸ்துவின் குணமளிக்கும் அன்பைப் பகிர்வதற்கு, இரக்கத்தின் யூபிலி ஆண்டின் தவக்காலத்தில் நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்று அமெரிக்க ஐக்கிய நாட்டின் அலபாமா பேராயர் தாமஸ் ரோடி (Thomas Rodi) அவர்கள் கூறினார்.

உலகெங்கும் துயர் துடைப்புப் பணிகளுக்கு உதவி செய்யும் நோக்கத்தில், மார்ச் 6ம் தேதி, ஞாயிறன்று, அமெரிக்க ஐக்கிய நாட்டின் அனைத்து ஆலயங்களிலும் தவக்கால நிதி திரட்டப்படும் என்று அமெரிக்க ஆயர் பேரவையின் சார்பில் அறிவித்துள்ள பேராயர் ரோடி அவர்கள் இவ்வாறு கூறினார்.  

அமெரிக்க ஆயர் பேரவையும், கத்தோலிக்க துயர் துடைப்பு அமைப்பும் இணைந்து மேற்கொள்ளும் இந்த முயற்சிக்கு, "மாற்றுருவில் வரும் இயேசு" (“Jesus in Disguise”) என்று பெயரிடப்பட்டுள்ளது.

மதக்கலவரம், போர், இயற்கைப் பேரிடர் இவற்றால் துன்புறும் மக்களின் தேவைகளை நிறைவு செய்யவும், வறுமையின் காரணமாகப் புலம் பெயர்ந்து வாழ்வோருக்கு சட்டப்பூர்வமான உதவிகள் வழங்கவும் இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று இவ்வமைப்பினர் அறிவித்துள்ளனர்.

ஆதாரம் : CRS/USCCB / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.