2016-02-23 15:17:00

சிரியாவில் 43 கிறிஸ்தவப் பிணையல் கைதிகள் விடுதலை


பிப்.23,2016. சிரியாவின் வட கிழக்குப் பகுதியில், 2015ம் ஆண்டு பிப்ரவரியில் நடந்த இராணுவத் தாக்குதலின்போது, பிணையல் கைதிகளாகக் கொண்டு செல்லப்பட்ட 43 கிறிஸ்தவர்களை ஐ.எஸ். இஸ்லாமிய அரசு விடுதலை செய்துள்ளதாக, கீழை வழிபாட்டுமுறை அசீரியக் கிறிஸ்தவ சபையின் இடர்துடைப்பு நிறுவனம்(ACERO)  அறிவித்துள்ளது. 

2015ம் ஆண்டு பிப்ரவரியில், சிரியாவின் கிழக்குப் பகுதி அசீரிய மறைமாவட்ட கிராமத்திலிருந்து கடத்தப்பட்ட 200 பேரில், இப்போது விடுதலை செய்யப்பட்டவர்களும் உள்ளடங்குவர் என்று அச்சபையின் தலைவர் Mar Afram Athneil அவர்கள் தெரிவித்தார்.

கடந்த ஆண்டில் பிணையல் கைதிகளாக எடுத்துச் செல்லப்பட்ட 200  கிறிஸ்தவர்களும் விடுதலை செய்யப்பட்டுவிட்டனர் என்றும் Athneil அவர்கள் தெரிவித்தார்

மேலும், சிரியாவில் நாடெங்கும் போர் நிறுத்தம் ஏற்படுவதற்கு, இத்திங்களன்று இசைவு தெரிவிக்கப்பட்டுள்ள உடன்பாட்டை வரவேற்றுள்ளார் ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன். நம்பிக்கையின் அடையாளமாகவுள்ள இந்த ஒப்பந்தம், வருகிற சனிக்கிழமையன்று அமலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : UN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.