2016-02-22 14:57:00

தமிழகத்தில் 66.8இலட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து


பிப்.22,2016. தமிழகத்தில், இஞ்ஞாயிறன்று நடந்த இரண்டாம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாமில், 66.8 இலட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து தரப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம், தமிழகம் முழுவதும், 43 ஆயிரத்து, 51 முகாம்களில் ஞாயிறன்று நடந்தது. 1,652 நடமாடும் மையங்கள் மற்றும் 1,000 நடமாடும் குழுக்கள், சொட்டு மருந்து வழங்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. அரசு ஊழியர் போராட்டம் முடிவுக்கு வந்த நிலையில், அங்கன்வாடி பணியாளர்களும் இதில் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

மொத்தம், 70 இலட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இஞ்ஞாயிறு மாலை வரை, 66.8 இலட்சம் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இத்திங்களும் செவ்வாயும், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப நலவாழ்வு நிலையங்களில் சொட்டு மருந்து வழங்கப்படும்; நலவாழ்வுப் பணியாளர்கள் வீடு தேடி வந்து, விடுபட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்குவர் என, நலவாழ்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆதாரம் : தினமலர்/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.