2016-02-19 15:11:00

இந்திய கத்தோலிக்க நலவாழ்வு கழகத்தின் இரத்த தானம்


பிப்.19,2016. இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில், இரத்த தானத்தை ஒரு பரிவன்புச் செயலாக நோக்கி, அதை நாடெங்கும் ஊக்கப்படுத்தி வருகிறது இந்திய கத்தோலிக்க நலவாழ்வு கழகம்.

இது குறித்து இந்திய கத்தோலிக்க நலவாழ்வு கழகத்தின் பொது இயக்குனர் அருள்பணி Tomi Thomas அவர்கள் கூறியபோது, இரத்த தானம் வழங்குவதை ஊக்குவிக்கும் முயற்சியினால், தங்களின் மருத்துவச் செலவுகளை ஏற்க இயலாத ஏழைகளும், ஒதுக்கப்பட்டவர்களும் பலனடைகின்றனர் என்று கூறினார்.

ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவுக்குத் தேவைப்படும் மொத்த இரத்தம் ஏறக்குறைய நான்கு கோடி யூனிட்கள் ஆகும்(1 யூனிட் இரத்தத்தின் அளவு 450 மில்லி லிட்டர் ஆகும்). ஆனால் கிடைப்பதோ வெறும் 40 இலட்சம் யூனிட்கள் மட்டுமே என்று சொல்லப்படுகின்றது.

இந்தியாவில் தேசிய இரத்ததான தினம் அக்டோபர் முதல் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.