2016-02-05 15:48:00

அமைதியைக் கட்டியெழுப்புவதற்கு தேசிய அளவில் ஒற்றுமை அவசியம்


பிப்.05,2016. இலங்கையில் அமைதியைக் கட்டியெழுப்புவதற்கு தேசிய அளவில் அனைத்துச் சமூகத்தினர் மத்தியில் ஒற்றுமை அவசியம் என்று, கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள் இலங்கையின் 68வது சுதந்திர தினச் செய்தியில் கூறியுள்ளார்.

பிப்ரவரி 04, இவ்வியாழனன்று இலங்கையில் சிறப்பிக்கப்பட்ட 68வது சுதந்திர தினத்திற்கென வெளியிட்ட செய்தியில், நாட்டில் உண்மையான சுதந்திரச் சூழலைக் கட்டியெழுப்புவதற்கு அனைவர் மத்தியிலும் ஒற்றுமை இன்றியமையாதது என்று கூறியுள்ளார், கர்தினால் இரஞ்சித்.

இத்தகையச் சூழலில், அனைத்து மக்களும் அமைதியிலும், ஒற்றுமையிலும், நல்லிணக்கத்திலும், மகிழ்விலும் வாழ இயலும் என்றும், தேசிய அளவில் ஒப்புரவு தொடர்ந்து இடம்பெற வேண்டுமென்றும் கர்தினாலின் செய்தி கூறுகிறது.

இதற்கிடையே, அநீதியான முறையில் சிறை வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பல இடங்களில் பேரணிகளும் இடம் பெற்றன.  

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.