2016-02-03 17:15:00

திருநீற்றுப் புதன் திரட்டப்படும் நிதி, பிறரன்பு பணிகளுக்கு


பிப்.03,2016. அமெரிக்க ஐக்கிய நாட்டின் அனைத்து ஆலயங்களிலும் பிப்ரவரி 10ம் தேதி, திருநீற்றுப் புதனன்று திரட்டப்படும் உண்டியல் நிதி, மத்திய கிழக்கு ஐரோப்பா, மற்றும் மத்திய ஆசியா பகுதிகளில் வாழும் மக்களின் மேம்பாட்டிற்காகப் பயன்படுத்தப்படும் என்று கத்தோலிக்க பிறரன்பு அமைப்பு ஒன்று கூறுகிறது.

ஒவ்வோர் ஆண்டும், திருநீற்றுப் புதனன்று, Aid to the Church in Need என்ற கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பு திரட்டும் இந்நிதி உதவியால், வளர்ந்துவரும் பல நாடுகள் பயன்பெற்று வருகின்றன என இவ்வமைப்பினர் கூறியுள்ளனர்.

2015ம் ஆண்டு இவ்வமைப்பினரால் திரட்டப்பட்ட 77 இலட்சம் டாலர்கள் நிதி உதவியைக் கொண்டு 250க்கும் மேற்பட்ட செயல் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன என்று CNS கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது.

இரக்கத்தின் சிறப்பு யூபிலியைக் கொண்டாடும் இவ்வேளையில், தவக்காலத்தை இத்தகைய ஒரு முயற்சியுடன் துவக்குவது பொருளுள்ளதாக இருக்கும் என்று Aid to the Church in Need அமைப்பின் பொறுப்பாளர்களில் ஒருவரான பேராயர் Blase Cupich அவர்கள் கூறினார்.

ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.