2016-02-03 17:06:00

உரையாடலில் ஈடுபடுவது, அமைதியான வாழ்வுக்கு அடித்தளம்


பிப்.03,2016. உண்மையான மரியாதையுடன், மாறுபட்ட கண்ணோட்டங்களை வரவேற்று, மனம் திறந்த உரையாடலில் ஈடுபடுவது, அமைதியான வாழ்வுக்கு அடித்தளம் என்று, பல்சமய உலக அமைப்பின் கூட்டத்தில், அரசுத் தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.

பிப்ரவரி 1ம் தேதி முதல், 7ம் தேதி முடிய, கடைபிடிக்கப்படும் உலக பல்சமய நல்லிணக்க வாரத்தையொட்டி, வியென்னா நகரில் இயங்கி வரும் KAICIID என்ற பல்சமய அமைப்பின் தலைமையகத்தில் பேசிய ஆஸ்திரிய அரசுத் தலைவர், முனைவர் Heinz Fischer அவர்கள் இவ்வாறு கூறினார்.

நாட்டுப் பற்று, மொழிப் பற்று, மதப் பற்று என்ற போர்வைகளில், உலகில் நடமாடும் அடிப்படைவாதப் போக்குகளுக்கு ஒரு சிறந்த மாற்றாக விளங்குவது, உண்மையான உரையாடல் என்று அரசுத் தலைவர் Fischer அவர்கள் வலியுறுத்தினார்.

பல்சமய, பன்முகக் கலாச்சார உரையாடலுக்கென King Abdullah Bin Abdulaziz அவர்கள் பெயரால் 2012ம் ஆண்டு உருவாக்கப்பட்ட KAICIID என்ற உலக அமைப்பில், புத்தம், கிறிஸ்தவம், இந்து, இஸ்லாம் மற்றும் யூதம் ஆகிய ஐந்து பெரும் மதங்களைச் சார்ந்தவர்கள், தலைமைக் குழு உறுப்பினர்களாகப் பணியாற்றுகின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.