2016-02-02 15:23:00

திருவனந்தபுரம் உயர்மறைமாவட்டத்திற்கு துணை ஆயர்


பிப்.02,2016. கேரளாவின் திருவனந்தபுரம் இலத்தீன் வழிபாட்டுமுறை உயர்மறைமாவட்டத்திற்கு, அருள்பணி கிறிஸ்துதாஸ் ராஜப்பன் அவர்களை, துணை ஆயராக, இச்செவ்வாயன்று நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருவனந்தபுரம் உயர்மறைமாவட்டத்திற்கு, துணை ஆயராக நியமிக்கப்பட்டுள்ள அருள்பணி கிறிஸ்துதாஸ் ராஜப்பன் அவர்கள், அவ்வுயர்மறைமாவட்டத்தின் புனித வின்சென்ட் குருத்துவக் கல்லூரியின் அதிபராக, 2013ம் ஆண்டிலிருந்து பணியாற்றி வந்தவர்.

திருவனந்தபுரம் உயர்மறைமாவட்டத்திலுள்ள Adimalathuraவில், 1971ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி பிறந்த புதிய ஆயர் கிறிஸ்துதாஸ் ராஜப்பன் அவர்கள், Pune பாப்பிறைக்  கல்லூரியில் மெய்யியல், இறையியல் படிப்பை முடித்து, 1998ம் ஆண்டில், அருள்பணியாளராக  திருப்பொழிவு செய்யப்பட்டார்.

2009ம் ஆண்டில் உரோம் உர்பானியானம் பல்கலைக்கழகத்தில் மறைப்பணியியலில் முனைவர் பட்டம் பெற்ற இவர், 2010ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டுவரை ஆல்வே புனித யோசேப் பாப்பிறை குருத்துவக் கல்லூரியில் ஆன்மீக வழிகாட்டியாகவும், பேராசிரியராகவும் பணியாற்றினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.