2016-02-02 16:16:00

21ம் நூற்றாண்டில் அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவை


பிப்.02,2016. 18ம் நூற்றாண்டில் ஐரோப்பிய விழுமியங்களையும், மதத்தையும், வட அமெரிக்காவுக்குக் கொண்டு வந்ததில் கத்தோலிக்க மறைப்பணியாளர்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர் என்று அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவை கூறியுள்ளது.

பிரான்சிஸ்கன் சபையினர், இயேசு சபையினர், தொமினிக்கன் சபையினர் மற்றும் பிற கத்தோலிக்க துறவு சபைகள், வட அமெரிக்காவில் மறைப்பணித் தளங்களை அமைத்தனர், அவையே பொருளாதார, அரசியல் மற்றும் சமய மையங்களாக மாறின என்றும் அமெரிக்க ஆயர் பேரவை கூறியுள்ளது.

மறைப்பணித் திருஅவை இன்னும் மறைந்துவிடவில்லை, அமெரிக்க ஐக்கிய நாட்டு கத்தோலிக்கரின் வாழ்வில் இது இன்னும் உயிர்த்துடிப்புள்ள ஓர் அங்கமாக உள்ளது என்றும் கூறிய ஆயர் பேரவை, 21ம் நூற்றாண்டில் எதிர்கொள்ளும் சவால்களைப் புறக்கணித்து, நாடெங்கும் கத்தோலிக்கத்தைக் கொண்டு செல்லும் நோக்கத்தை, அமெரிக்கத் திருஅவை கொண்டிருக்கின்றது என்றும் கூறியுள்ளது. 

ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.