2016-02-01 16:02:00

51வது உலக திருநற்கருணை மாநாட்டின் நிறைவு அறிக்கை


பிப்.01,2016. 51வது அகில உலக திருநற்கருணை மாநாட்டைக் கொண்டாடுவதற்கு, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் திருத்தூதர்களாகிய நாம் கூடியிருப்பது, தொடக்க கால திருத்தூதர்கள், உயிர்த்த கிறிஸ்துவைச் சந்திப்பதற்குக் கூடியிருந்தது போன்று உள்ளது என்று, செபு பேராயர் ஹோசே பால்மா அவர்கள் கூறினார்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் செபு நகரில் நடைபெற்று வந்த 51வது அகில உலக திருநற்கருணை மாநாட்டின் நிறைவாக, கடந்த சனிக்கிழமையன்று அம்மாநாட்டின் இறுதி அறிக்கையை வெளியிட்ட பேராயர் பால்மா அவர்கள், இரு எம்மாவுஸ் திருத்தூதர்களின் அழகான அனுபவத்தை நாம் இப்பொழுது மீண்டும் வாழ்கிறோம் என்று கூறினார்.

வாழ்வின் உணவு, ஏழைகளின் உணவு, உரையாடலின் உணவு மற்றும் மறைப்பணியின் உணவு என்ற கிளை தலைப்புகளுடன் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில், இயேசுவின் வரலாறை அறிவிப்பதற்கு, தூய ஆவியார் நம்மை அனுப்புகிறார் என்பதில் நாம் உறுதியாய் இருக்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

"நம்மில் வாழும் கிறிஸ்து, நமது நம்பிக்கையும், மகிமையுமாய் இருக்கிறார்" என்ற தலைப்புடன் சனவரி 24, கடந்த ஞாயிறன்று துவங்கிய 51வது அனைத்துலக திருநற்கருணை மாநாடு, சனவரி 31, இஞ்ஞாயிறன்று நிறைவு பெற்றது. 

ஆதாரம் : CBCP / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.