2016-01-30 15:23:00

ஜப்பானில் முதல் முறையாக எதிர்வட்டி விகிதம்


சன.30,2016. வர்த்தக வங்கிகள் இருப்பில் பணம் வைத்திருந்தால் அதற்கு -0.1 விழுக்காடு கட்டணம் செலுத்த வேண்டும் என்ற எதிர் வட்டிவிகிதம் ஜப்பானில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால், வர்த்தக வங்கிகள் தங்கள் இருப்பில் பணம் வைத்திருந்தால் அதற்கு -0.1 விழுக்காடு என்ற அளவில் ஜப்பானின் மத்திய வங்கி கட்டணம் வசூலிக்கும்.

இதனால், வங்கிகள் பணம் சேமிப்பதைக் கைவிட்டு விட்டு, கடன் கொடுக்க ஆரம்பிக்கும் எனவும், வளர்ச்சியின்றி இருக்கும் பொருளாதாரத்திற்கு உத்வேகம் கிடைக்கும் எனவும் மத்திய வங்கி கருதுகிறது.

யூரோ வலைய நாடுகளில் ஏற்கனவே எதிர் வட்டிவிகிதம் நடைமுறையில் இருக்கின்றது. ஆனால், ஜப்பானில் இம்மாதிரி அறிமுகப்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.

ஆதாரம் : பிபிசி/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.