2016-01-27 15:53:00

புத்தாண்டையொட்டி,வியட்நாம் மறைமாவட்டங்களில் பிறரன்புப்பணிகள்


சன.27,2016. வியட்நாம் நாட்டில் பிப்ரவரி 7ம் தேதி முதல் கொண்டாடப்படவிருக்கும் புத்தாண்டையொட்டி, அந்நாட்டின் 26 மறை மாவட்டங்களும் இணைந்து, பிறரன்புப் பணிகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளன என்று ஆசிய செய்திக் குறிப்பொன்று கூறுகிறது. இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில் கொண்டாடப்படும் இந்தப் புத்தாண்டு நிகழ்வில், அனாதைக் குழந்தைகள் மீது தனிக் கவனம் செலுத்துமாறு, வியட்நாம் ஆயர் பேரவையின் பிறரன்புப் பணிகள் குழுவின் தலைவர்,ஆயர், Joseph Nguyễn Văn Yến அவர்கள் விண்ணப்பித்துள்ளார்.

கடன் தொல்லையால் துன்புறும் குடும்பங்கள், நோயுற்றோர், மற்றும் கல்வி வாய்ப்பை இழந்த குழந்தைகள் ஆகியோர் மீது தனிக் கவனம் செலுத்த, வியட்நாம் தலத்திருஅவை முடிவு செய்துள்ளதென்று ஆசியச் செய்தி கூறியுள்ளது.

9 கோடி மக்களைக் கொண்டுள்ள வியட்நாம் நாட்டில், 1 கோடியே 80 இலட்சம் மக்கள் மிக வறிய நிலையில் வாழ்கின்றனர் என்று இந்நாட்டின் பொருளாதார நிபுணர் ஒருவர் ஆசியச் செய்தியிடம் கூறியுள்ளார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.