2016-01-23 15:02:00

புனித பியாஜோ நூற்றாண்டு விழாவுக்கு கர்தினால் Puljić


சன.23,2016. புனித பியாஜோ (Biagio) மறைசாட்சியானதன் 17ம் நூற்றாண்டு கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்குத் தனது சிறப்புப் பிரதிநிதியாக, கர்தினால் Vinko Puljić அவர்களை நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

குரோவேஷிய நாட்டின் Dubrovnik மறைமாவட்டத்தின் பாதுகாவலராகிய புனித பியாஜோ மறைசாட்சியானதன் 17ம் நூற்றாண்டு மற்றும் அடிமை வர்த்தகத்திற்கு எதிராக சட்டம் கொண்டுவரப்பட்டதன் 600ம் ஆண்டு நிறைவு விழாக்கள், வருகிற பிப்ரவரி 3ம் தேதி சிறப்பிக்கப்டவுள்ளன.

இவற்றில் கலந்து கொள்வதற்குத் தனது சிறப்புப் பிரதிநிதியாக, Vrhbosna பேராயர் கர்தினால் Vinko Puljić அவர்களை அனுப்பும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆங்கிலத்தில் புனித Blaise என்று அழைக்கப்படும் புனித பியாஜோ, ஒரு மருத்துவர், அக்காலத்திய Armenia நாட்டின் Sebastea(தற்போதைய துருக்கியின் Sivas) மறைமாவட்ட ஆயரான இவர், அடிக்கப்பட்டு, இரும்புக் கம்பிகளால் தாக்கப்பட்டு, இறுதியில் தலைவெட்டப்பட்டு மறைசாட்சியானார். இலத்தீன் வழிபாட்டுமுறையில் பிப்ரவரி 3ம் தேதியும், கீழைத் திருஅவைகளில் பிப்ரவரி 11ம் தேதியும் இவரது விழா சிறப்பிக்கப்படுகிறது. கம்பளம் நெய்பவர்களுக்கு இவர் பாதுகாவலர்.

மேலும், சீனக் குடியரசு என்று அழைக்கப்படும் தாய்வானின், திருப்பீடத்திற்கான புதிய தூதர் Matthew S.Lee அவர்களிடமிருந்து, இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் நம்பிக்கைச் சான்றிதழைப் பெற்றுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.